சாலையை சீரமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்!

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் உள்ள மோசமான சாலை நிலையை சீரமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, வழக்கறிஞர் சங்க அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வளாகத்தில் சார் ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிளைச் சிறை, தாலுகா அலுவலகம், டிஎஸ்பி. அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தொடர்புடைய செய்தி