கோவில்பட்டி தாலுகா மறுசீரமைப்பு – தமிழக அரசு அரசாணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் குருவிகுளம் யூனியன்களை மறுசீரமைத்து தமிழக அரசு இறுதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டம் இளையரசனேந்தல் உள்வட்டத்தில் உள்ள 12 வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்கள் வருவாய்த்துறை நிர்வாகத்தில் தூத்துக்குடி மாவட்ட கட்டுப்பாட்டுக்கு வந்தாலும், உள்ளாட்சி நிர்வாகம் தற்போதைக்கு தென்காசி மாவட்டத்திலேயே தொடரும். அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு முழுமையான நிர்வாக மாற்றம் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி