அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல் ; குடோனுக்கு சீல்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் உள்ள ஒரு தனியார் குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வேளாண்மை துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விருதுநகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இங்கு உரங்கள் கொண்டு வரப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி உரங்களை பதுக்கியது சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த குடோன் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமானது.

தொடர்புடைய செய்தி