பலத்த மழை: கோவில் வளாகத்தில் தேங்கிய நீர் – பக்தர்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால், சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவில் வளாகத்தின் உட்புறத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மழைநீர் வெளியேற வழிகள் அடைக்கப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இனி நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி