கோவில்பட்டி பகுதியில் வெளுத்து வாங்கும் மழை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கழுகுமலை, காமநாயக்கன்பட்டி, அய்யநேரி, அப்பனேரி, இளையரசனேந்தல் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், தற்போது சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி