தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ வழக்கில் தாத்தா கைது

தூத்துக்குடி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே உள்ள நாரைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயிரம்காத்தான் மகன் சுப்பிரமணியன் (61), இவர் பேத்தியுறவு முறையான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் தாயார் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி