கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் உராய்வால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் முத்துமாரி, புஷ்பம் ஆகியோர் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரு பெண்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.