பயிர்க்கடன் பெற வங்கியில் நீண்ட நேரம் காத்தும் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பயிர்க்கடன் பெற வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், மழையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட வட்டியில்லா கடன்கள் தற்போது மத்திய கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே வழங்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். வங்கி பணியாளர்களின் மெதுவான செயல்பாடு, போதிய இட வசதி இன்மை, குறைந்த டோக்கன் விநியோகம், மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஆகியவை விவசாயிகளை மேலும் அவதிக்குள்ளாக்குகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே வட்டியில்லா கடன்களை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி