கோவில்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மாடத்தி (60) என்ற மூதாட்டி ரயிலில் மோதி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த இவர், கோவில்பட்டிக்கு வந்ததற்கான காரணமும், மரணத்திற்கான சூழ்நிலைகளும் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.