கோவில்பட்டி: தவெக–காங்கிரஸ் கூட்டணி அதிமுகவை பாதிக்காது; கடம்பூர் ராஜு

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, தமிழக வெற்றிக் கழகம்–காங்கிரஸ் கூட்டணி அமைந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். பாண்டவர்மங்கலம் தீப்பெட்டி ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் நிவாரணம் போதாது என்றும், தீப்பெட்டி நலவாரியம் மூலமும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி