இந்த நிலையில் பேருந்து நடத்துனர் அதிக மது போதையில் இருந்த வீரையனை கரிசல்குளம் கிராமத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதிகமாக மது குடித்திருந்ததால் வீட்டிற்கு செல்ல முடியாமல் வீரையன் மது போதையில் நடுரோட்டில் படுத்துக்கொண்டு தனது செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஓட்டுநர்கள் அவரை மீட்டு பேருந்து நிலையத்தில் படுக்கவைத்துள்ளனர். மேலும் அரசு பேருந்து நடத்துனர்கள் மது போதையில் இருக்கக்கூடிய நபரை அவரது கிராமத்தில் இறக்கிவிட்டு சென்றிருக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து சென்றிருக்க வேண்டும்.
அதிக போதையில் இருந்த நபரை இரவில் சாலையில் இறக்கிவிட்டு சென்றதால் மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டிருப்பவரை அதிவேகமாக செல்லக்கூடிய வாகனத்தில் அவரது உயிர் பலியாகியிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து உள்ளது.