தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கா. கருணாநிதி வெற்றி பெற்றதை முன்னிட்டு, கயத்தாறு அரசன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (64) என்பவர், திமுக வெற்றி பெற்றால் மொட்டை அடிப்பேன் என வைத்திருந்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கோயிலில் மொட்டை அடித்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரவலாகப் பேசப்படுகிறது.