விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: மாற்றுத்திறன் பெற்றவர்களுக்கு தனித்திறமைகள் உண்டு என்பதை உணர்ந்துதான் மாற்றுத்திறனாளிகள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டினார். அதுமட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஒரு துறையை உருவாக்கி, அந்தத் துறையை அவர் கையில் வைத்துக்கொண்டார்.
அதேபோல், திராவிட முறையில் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாற்றுத்திறனாளிகள் துறையைத் தனது கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும், பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுகவும், திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார். விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.