கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள முருகன் என்பவரின் தீப்பெட்டி ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த சுடலைமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் இன்று (மார்ச் 3) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஆலையின் உரிமையாளர் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.