பயிர்கள் அழிப்பு: விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே முடுக்கலாங்குளம் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்களை ‘ஸ்பீடு பூமி’ என்ற தனியார் நிறுவனம் இயந்திரங்களால் அழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இழப்பீடு வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டும் இதுவரை வழங்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் அடுத்த கட்டமாக கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் பெருந்திரள் கருப்புக் கொடி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி