கோவில்பட்டியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா ₹1,000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. நகர்மன்றத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.