கோவில்பட்டி பள்ளியில் குழந்தைகள் தின விழா

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி செயலாளர் அட்வகேட் செல்வம் மற்றும் பொருளாளர் பாஸ்கரன் ஆலோசனையின்படி விழா சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சிவராணி மற்றும் ஆசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி