கயத்தாறு: கார் டயர் வெடித்து விபத்து: தலைமையாசிரியர் பலி

கயத்தாறு அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த தலைமையாசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜன் ஜான் (57). ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். தனது மனைவி ஜோன் எஸ்தருடன் (50), விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் செவ்வாய்க்கிழமை சென்ற ராஜன் ஜான், பின்னர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கயத்தாறையடுத்த சவாலாப்பேரி அருகே மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுந்தது. 

இதில் ராஜன் ஜான், எஸ்தர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் ஜான் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி