பின்வரும் விபரத்தின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் முன்பு பயணிகளை இறக்குவதற்கும் மற்றும் ஏற்றுவதற்கும் மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இளையரசனேந்தல் ரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் EMAR மெயின் ரோடு வழியாக மாதாங்கோவில் ரோடு வழியாக தூத்துக்குடி விளாத்திக்குளம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் EMAR மெயின் ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கழுகுமலை, சங்கரன்கோவில், திருநெல்வேலி, தென்காசி நெடுங்குளம் செல்லும் பேருந்துகளும் நகருக்குள் வந்து இளையரசனேந்தல் ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.