எட்டையபுரம் அருகே விபத்து: வியாபாரி படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே கார் மற்றும் சரளைக்கல் ஏற்றிச் சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரையைச் சேர்ந்த வியாபாரி கார்த்திகைசெல்வன் (50) படுகாயம் அடைந்தார். தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி