தூத்துக்குடி:ஆரி ஒர்க், மெஹந்தி, சிகை அலங்கார போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாய் இண்டர்நேசனல் அறக்கட்டளை சார்பாக பெண்கள் சுயதொழில் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுயதொழில் முனைவோர் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்வும் இணைந்து கோவில்பட்டி சிந்தாமணி நகர் சாய் விஷ்ணு மகாலில் நடந்தது. 

23 வார்டு கவுன்சிலர் சுதாசிந்தன் தலைமை தாங்கி சுயதொழில் செய்வதன் அவசியம் மற்றும் வாய்ப்புகள் பற்றி எடுத்துக் கூறி வாழ்த்தி விழாவை தொடங்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் வெங்கடேஷ்வரன், மற்றும் ஆரி ஒர்க், மெஹந்தி, சிகை அலங்கார பயிற்சி ஆசிரியர்கள், சிறப்பு ஆலோசகர் மேனாள் ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து திறன் பயிற்சி போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். 

அறக்கட்டளை செயலாளர் சுந்தர், நிர்வாகி பிராசந்த் மற்றும் சட்ட அலோசகர் ராஜேந்திரசிங் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை ஒருங்கிணைப்பு செய்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கியும், குழந்தைகள் திறன் பயிற்சியில் கோவில்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுதன்சூமுத்ரன் கலந்து கொண்டு 30 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்தார். குழந்தைக்கு அரங்கமே கை தட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி