வாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் கைது!

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, இந்திரா நகர் பெருமாள் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பிரபு (28) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரது சட்டையில் மறைத்து வைத்திருந்த வாளை போலீசார் கண்டெடுத்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக பழிவாங்க வாளை வைத்திருந்ததாக பிரபு ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி