வேட்பாளர் பொன்குமரன் ஆணையர் தேர்தல் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தார். ஆனால் புகாரின் மீது பதில் அளிக்காமல், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை (பொ) மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் மனு மீது டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர்கள் விசாரித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் பொன்குமரன் கூறுகையில், இதில் நீதி கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்.