ஆசிய போட்டியில் 2 வெள்ளி: மகாராஜனுக்கு சிறப்பான வரவேற்பு

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற கோவில்பட்டி வீரர் மகாராஜனுக்கு இன்று கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன், Snatch மற்றும் Clean & Jerk ஆகிய இரு பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இன்று ஊருக்கு திரும்பிய அவரை கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் பளுதூக்கும் வீரர்கள், விளையாட்டு அமைப்பினர்கள், குடும்பத்தினர் என பலர் உற்சாகமாக வரவேற்றனர். 12 வயதிலிருந்து பளுதூக்கத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக பட்டியாலாவில் தேசிய பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்த மகாராஜன், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். கோவில்பட்டியில் பளுதூக்கும் வீரர்கள் அதிகம் உள்ளதால், தேசிய & உலக தரத்துக்கு ஏற்ற பளுதூக்கும் பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி