விபத்தில் பலி லாரி டிரைவர் குடும்பத்திற்கு 2 லட்சம்நிதியுதவி

சென்னையில் துறைமுகப் பகுதியில் கடலுக்கு அடியில் 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த லாரி டிரைவர் முத்து மாரியப்பன் குடும்பத்தினருக்கு, ஈ-வாகன் சேவை அமைப்பின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த முத்து மாரியப்பன் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைப்பினர், காசோலையை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மூலம் வழங்கினர். மேலும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் அனைத்து ஏற்பாடுகளையும் ஈ-வாகன் சேவை மேற்கொண்டதுடன், 1160 உறுப்பினர்கள் தலா ரூ. 199 வழங்கி நிதி திரட்டியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி