அதன்படி தமிழகம் முழுவதும் 280 சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர்கள் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த மே 29ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அவை தற்போது அமலுக்கு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, புதியம்புத்தூர், குரும்பூர், சாயர்புரம், கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூர், சூரங்குடி, குளத்தூர், தருவைகுளம், சங்கரலிங்கபுரம், எப்போதும் வென்றான், புதூர், மெஞ்ஞானபுரம் ஆகிய 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த காவல் நிலையங்களில் தனியாக இன்ஸ்பெக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
'ராயன்' பட தேசிய விருது சர்ச்சை: தனுஷ் விளக்கம்