கோவில்பட்டி அருகே சாலையோரம் சந்தேகத்திற்கிடமாக நின்ற லோடு வேனில் இருந்து 1,150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 23 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.