தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நாளை (மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர விமான சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை முதல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் விமானங்களின் நேரங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.