தமிழ்நாடு அரசின் ஆதரவில்லாமல் இது சாத்தியமாகி இருக்காது - குகேஷ்

தமிழ்நாடு அரசின் ஆதரவில்லாமல் எனது வெற்றி சாத்தியமாகி இருக்காது என உலக செஸ் சாம்பியன் குகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் உரையாற்றிய குகேஷ், "சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி நடைபெறவில்லை என்றால் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வாகியிருக்க முடியாது. கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வானதால் தான் உலக சாம்பியனாக முடிந்தது. அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி