திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற 'வெற்றிப்பயணம்' அரசு பேருந்தின் முன்னும் பின்னும் இரு வேறு பதிவு எண்கள் எழுதப்பட்டிருந்ததால் பயணிகள் பெரும் குழப்பமடைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே வேகமாக வைரலாகி பரவியது. இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தவறை உணர்ந்து இன்று இரவுக்குள்ளேயே அந்த பதிவெண்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நன்றி:PT