நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று. தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்! என குறிப்பிட்டுள்ளார்.