ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் கடந்த ஆண்டு அக்.11-ஆம் தேதி, மைசூர்-தர்பங்கா பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன, பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து. இதில், 20 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து 'நாசவேலை' பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி