டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் குண்டு வெடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் வெடித்தது Hyundai ஐ20 ரக கார் எனவும், காரில் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்ததாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2011ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகு டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.