என்டிஏ ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது: மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வடக்கிலிருந்து வரும் என்.டி.ஏ என்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் தேர்தல் இது என்றார். பாஜகவின் துணையுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க நினைப்பதாகவும், அவர் தரக்குறைவாகப் பேசுவதாகவும் விமர்சித்தார். 'தமிழ்நாடு' எனச் சொல்லக்கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் குரல் என்று கூறிய அவர், தான் உள்ளவரை தமிழ்நாட்டை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது என ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி