தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தனது X தள பக்கத்தில், "தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு நிராகரிப்பதை அராஜகம் என முத்திரை குத்துவது, தேவையில்லாத மும்மொழிக்கொள்கையை திணிப்பது, மறுத்தால் நிதியை தராமல் இருப்பது இதுதான் பாஜகவின் உத்தி. கூட்டாட்சி என்பது இவர்கள் மொழியில், 'மாநிலங்கள் உத்தரவுகளை பின்பற்ற வேண்டுமே தவிர கேள்வி எழுப்பக்கூடாது' என்பதே ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.