கரூர் சம்பவத்தில் விஜய்யைக் கைது செய்யாததுதான் ஸ்டாலின் செய்த பெரும் தவறு என திமுக எம்.பி. பி.வில்சன் விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், மிசா கொடுமைகளைக் கேலி செய்கிறீர்களா, 2013-ல் தந்தையுடன் கொடநாடு சென்றதும், 2020-ல் பட வெளியீட்டிற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததும் நினைவில்லையா? என கேட்டுள்ளார். மேலும், முதல்வர் விஜய் தனது நாகரிகமற்ற நடத்தையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.