நடிகர்-நடிகைகளுக்கும் இனி இது கட்டாயம்: விஷால் அதிரடி

நடிகர் சங்க உறுப்பினராக இருந்தால் மட்டுமே இனி சினிமாவில் நடிக்க முடியும் என விஷால் அறிவித்துள்ளார். திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது போல, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வருகிற 20-ம் தேதிக்குள் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் அனைவருமே உறுப்பினர் அட்டையை பெற வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி