கற்றாழை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை இயற்கை மாய்ஸ்ரைசர் என அழைக்கலாம். கற்றாழை ஜெல்லுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அது முகப்பொலிவுக்கு உதவுகிறது. சிறிது ரோஸ் வாட்டர் உடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் நன்றாக தேய்த்து 10 நிமிடங்களுக்குப் பின்னர் கழுவினால், முகம் பளபளப்பாகும். இந்த பேக் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.