கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கைக்கோளார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 80). ஓராண்டுக்கு முன் இருதய பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்தவர் நேற்று முன்தினம் (அக் 5) தனது டெய்லர் கடையில் பணியில் இருந்த போது திடீனெ ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு அவர் இறந்து இருப்பது தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.