நாகப்பட்டினம்: திருமணம் செய்து 6 மாதங்களே ஆன நிலையில் பெண் சடலமாக மீட்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த தாமரைப்புலம் பகுதியை சேர்ந்த நடராஜன்- சமுத்திரவள்ளி தம்பதியினர். இவர்களின் 3 வது மகள் 19 வயதான பூவரசி. இவரும் ஆயக்காரன்புலம் ராமசாமி, சித்ரா இவர்களின் மகன் வீரமணியிம் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு பூவரசியை வீரமணி தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பூவரசி தனது கணவர் வீட்டு அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். 

இது குறித்து வாய்மேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து 6 மாதம் ஆன நிலையில் தங்களது பெண் குளத்தில் இறந்து கிடந்தது சந்தேகமாக இருக்கிறது எனவும் முகத்தில் காயங்கள் இறப்பதாகவும் இறந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த பூவரசியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கணவர் வீரமணியை போலிசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்து 6 மாதமே ஆன நிலையில் பெண் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி