கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் காங்கேயம்பேட்டைத் தெருவைச்சேர்ந்தவர் முருகன் கூலித்தொழிலாளி, இவரது மகன் விஷால் (17) 8 ஆம் வகுப்பு படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை(அக்.8) இரவு இவரது நண்பர்கள் மகாராஜா, வசந்த் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் காங்கேயம் பேட்டையிலிருந்து திருபுவனத்திற்கு வந்து பிரதான சாலையில் பானிபூரி சாப்பிட்டுவிட்டு திரும்ப சென்றனர்.
விஷால் பின் இருக்கையில் கடைசியில் இருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த நபர்கள் விஷாலை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் போலீஸார் விஷாலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து எதற்காக வெட்டினர் என்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.