இந்த நிலையில் செப். 27 இல் அண்ணன் தம்பி இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமல்ஹாசன் மனோகரனை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மனோகரனை உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செப். 29 இல் மனோகரன் உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் நாச்சியார் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு பதிந்து, இறந்த மனோகரனை உடற்கூறாய்வுக்கு அனுப்பி கமலஹாசனை திங்கள்கிழமை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி