அப்போது அவரிடம் பேசிய நபர் உங்களுடைய நெருங்கிய உறவு பெண் என்னுடன் தொடர்பில் இருந்தார். அவருடைய ஆபாச படம் என்னிடம் உள்ளது. அதனை இணையத்தில் வெளியிடுவேன். அவ்வாறு வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதில் பயந்து போன அந்த விவசாயி ரூபாய் 7000 ஐ ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து அந்த நபரிடம் ஆபாச வீடியோ, புகைப்படத்தை அழிப்பது தொடர்பாக கேட்டபோது அந்த நபர் செல்போனை ஆப் செய்து விட்டு அவரிடம் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்.
இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த விவசாயி தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உறவு பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதாக கூறி விவசாயியை ஏமாற்றிய மர்ம நபர் இதுபோல் பலரையும் ஏமாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.