திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளான இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உரி அடித்தல், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மற்றும் மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்-மாவட்ட குற்றப்பிரிவு ஆகியோர் கலந்துகொண்டனர்.