குறிச்சியில் இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார்குடி அருகே குறிச்சியில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்படும் பெருமாள் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மருதப்பாடியைச் சேர்ந்த திலகன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பொன்னிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன் இருவரும் பணம் வசூல் செய்வதற்காக முத்துப்பேட்டை சென்று விட்டு மீண்டும் மன்னார்குடி திரும்பி உள்ளனர். இருசக்கர வாகனத்தை திலகன் போட்டி வந்துள்ளார் வாகனம் குறிச்சி எனும் இடத்தில் வந்த போது சாலையோரம் கரும்பு ஏற்றி நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த திலகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த கங்காதரன் பலத்த காயம் அடைந்தார் தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த திலகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி