இதை விரும்பாத சிறுமி, தனது காதலன் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் உதயகுமார், கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று, மயிலாடுதுறை அருகே வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் புகார் தெரிவித்ததையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
தொடர்ந்து குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித், சிறுமியை காதலித்த உதயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரஞ்சித்தின் தாய்- தந்தை மற்றும் சிறுமியின் தாய்- தந்தை ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.