வாழைக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லையன் (வயது 70) இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கூத்தூர் நடுப்படுகையில் உள்ள வாழைக்கொல்லைக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழைக்கொல்லைக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி