குடிநீர் கேட்டு திருத்துறைப்பூண்டியில் பெண்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே அத்திமடை, பாமணி கிராமங்களில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அத்திமடை கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் வேம்பரசி தலைமையிலான போலீசார், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி