திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம், பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுப்பிரமணியனின் மனைவி இந்திராவுக்கும் அவரது உறவினர் சந்திரசேகரனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவு குறித்து அறிந்த சுப்பிரமணியனை, இருவரும் சேர்ந்து தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்து வாய்க்காலில் தள்ளியுள்ளனர். இதனையடுத்து, சந்திரசேகரனும் இந்திராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.