கடந்த 4ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி, அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலை கண்டித்து, விசிக மாவட்ட பொருளாளர் இலா பழனி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் வெற்றிக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.